பழமொழியும் பொருளும் (2018-02-12)

ஆயிரம் பேரைக் கொன்ற வன் அரை வைத்தியன்

 சித்த மருத்துவம்தான் நமது பண்டைய மருத்துவம். மூலிகைகளால் குணமடையச் செய்யும் சித்த மருத்துவம் கற்றுக்கொள்ள வேண்டுமானால், மூலிகைச் செடிகளின் வகைகளை கண்டறியும் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். சித்த மருத்துவம் கற்றுக்கொள்ள செல்லும் சீடர்களுக்கு, குருக்கள் ஒரு கட்டத்தில் practical test போல காடுகளுக்கு சென்று மூலிகைச் செடிகளைப் பறித்து, அந்தச் செடிகளின் பெயர், அதன் பலன்களை சொல்லச் சொல்வார்கள்.

அந்தக் காலத்தில், ‘ஆயிரம் வேரை கொணர்ந்தவன் அரை வைத்தியன்’ என்று சொல்லி வந்தார்கள். அதாவது ஆயிரம் செடிகளை வேரோடு பறித்து, கொண்டு வந்து, அவை எந்தெந்த வகை என்று குருவிடம் சொன்னால், அவன் அரை வைத்தியனுக்கு சமம் என்று கூறுவார்கள். அது திரிந்து இப்படி ஆகிவிட்டது!

ஆயிரம் பேரைக் கொன்ற வன் அரை வைத்தியன் அல்ல ஆயிரம் வேரை கொன்றவன் அரை வைத்தியன்.

 
Share
0 Shares