பழமொழியும் பொருளும் (2017-11-14)

வர்மம், வைராக்கியம் தர்மத்தின் பலனையும் விழுங்கும்.

நாம் என்னதான் நல்லவர்களாக அனைவருக்கும் தர்மம் செய்பவர்களாக இருந்தாலும், நமக்கு கெடுதல் செய்தவர்கள் மீது பகை உணர்வு கொண்டு வாழ்ந்தால், “செய்த தர்மம் தலை காக்கும்” என்ற பழமொழி பொய்த்துப் போகும். அதாவது நாம் செய்த தர்மத்தின் பலனாக நமக்கு ஆபத்து ஏற்படாதென்றோ அல்லது நமக்கு சொர்க்கம் கிடைக்கும் என்றோ கூற இயலாது என்பதே இப் பழமொழியின் கருத்து ஆகும்.

வர்மம், வைராக்கியம் தர்மத்தின் பலனையும் விழுங்கும்.

 
Share
0 Shares