பழமொழியும் பொருளும் (2017-11-13)

கெவிலி சொல்ற பல்லி கழநி பானையில விழுந்துச்சாம்.

நாம் ஒன்று கூறும்போது பல்லி “உச்” கொட்டும். அப்போது “பல்லியே சொல்லிடுச்சி. நான் சொல்றதுதான் சரி” என்போம். பல்லி நாம் கூறுவதை ஆமோதிப்பது போன்ற சத்தம் போடுவதுதான் கெவிலி சொல்லுதல். மற்றவர்களுக்கு கெவிலி சொல்லும் பல்லியே அதனுடைய வாழ்கையில் என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் கழநி பானையில் விழுந்து இறக்கிறது. அதுபோல அறிவுரை கூறுபவர்களே சில சமயம் தவறு  செய்வார்கள் என்பதையே இப் பழமொழி உணர்த்துகின்றது.

கெவிலி சொல்ற பல்லி கழநி பானையில விழுந்துச்சாம்

 
Share
0 Shares