பழமொழியும் பொருளும் (2017-11-11)

கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே.

அதாவது முற்காலத்தில் வீட்டுத்தலைவர்கள்  கடல் கடந்து பொருளீட்ட செல்வார்கள். ஒரு ஊரிலிருந்து நான்கைந்து பேர் கூட்டாக சென்று ஐந்து வருடம், பத்து வருடம் என்று உழைத்து சம்பாதித்துவிட்டு சம்பாதித்த பணத்தை பொன்னும், வைரமுமாக மாற்றிக்கொண்டு கப்பலில் வருவார்ர்கள். 
அப்படி வரும்போது சில சமயம் கடல் சீற்றம் காரணமாக கப்பல் கவிழ்ந்து ஈட்டிய பொருளெல்லாம் இழந்து விடுவார்கள். தப்பித்து கரை சேரும் சிலர், ‘இவ்வளவு காலம் உழைத்துச் சம்பாதித்ததெல்லாம் இப்படி வீணாகிவிட்டதே.. இனி நம் ஊருக்கு என்ன கொண்டு செல்ல?’ என்ற விரக்தியில் கூட்டு சேர்ந்து ‘கன்னம் வைத்து’ திருட திட்டம் போடுவார்கள். 
அப்படி அவர்கள் திருடக்கூடாது என்பற்காக ‘கப்பலே கவிழ்ந்தாலும் கன்னம் வைக்கும் தொழிலில் ஈடுபடக்கூடாது என்பதற்காக ’ சொல்லப்பட்ட பழமொழி இது ஆகும்.

கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே

 
Share
0 Shares