பழமொழியும் பொருளும் (2017-10-12)

எறும்பு ஊர கல்லும் தேயும்.

 அதாவது எறும்புகள் ஒரு கல்லின்மீதோ அல்லது சுவற்றின்மீதோ செல்லும்போது அவை சென்றபாதைகளில் தடம் தெளிவாக தெரியும். காரணம் எறும்புகள் சென்ற இடம் தேய்ந்து இருக்கும். மறைமுகமாக  அவை நமக்கு முயற்சியின் தத்துவத்தை இதனூடாக உணர்த்துகின்றன. சாதாரண எறும்புகளே கல்லை தேய்த்து அவை சென்ற தடத்தினை உருவாக்கும்போது   மனிதர்களாகிய நாம் முயன்றால் மலையினையே சாய்த்துவிடலாம் என்பதே இப் பழமொழியின் பொருள் ஆகும்.

எறும்பு ஊர கல்லும் தேயும்.

 
Share
0 Shares