பழமொழியும் பொருளும் (2017-10-11)

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.

ஆற்றின் ஒரு கரையில் மேயும் மாட்டுக்கு அங்குள்ள புல்லைவிட மறுகரையில் உள்ள புல் கண்ணுக்குப் பசுமையாகத் தெரியும். அங்குப் போய் மேயலாமே என்னும் எண்ணம் அதற்குத் தோன்றும்.  அங்கும் புல்தான் இருக்கிறது என்று சென்று பார்த்த பின்னரே தெரியும். ஆகவே, தோற்றத்தைக் கண்டு ஏமாந்துவிடக் கூடாது. ஒருவன் தன்னிடம் எவ்வளவுதான் நிறைகள் இருந்தாலும் அடுத்தவரிடம் உள்ளதையே பெரிதாக எண்ணுவது மனித இயல்பு.

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை

 
Share
2 Shares