பழமொழியும் பொருளும் (2017-08-10)

ஒரு போது உண்பான் யோகி,  இருபோது உண்பான் போகி,  முப்போது உண்பான் ரோகி.

அதாவது  ஒரு வேளை உணவை உட்கொண்டு ஆழ்ந்த யோகப் பயிற்சி மேற்கொள்வதால், மூளையின் அடிப்பகுதியின்  கீழே உள்ள சுரப்பியானது நரை திரை நோய்களை அணுக விடாது. இருவேளை உணவை உட்கொள்வதால் வாழ்வு நோயற்று இன்பமுடையதாக இருக்கும். மூன்றுவேளை உணவு கொள்பவர்கள் நோயாளிகளாகவே இருப்பர். அஜீரணம், மலச்சிக்கல், குடல்நோய் போன்றவற்றால் இவர்கள் பாதிக்கப்பட்டு, எந்நேரமும் நோயுடன் போராடி வாழும் நிலையை உண்டாக்கும் என்பதே இப் பழமொழியின் பொருள் ஆகும்.

ஒரு போது உண்பான் யோகி,  இருபோது உண்பான் போகி,  முப்போது உண்பான் ரோகி.

 
Share
0 Shares