பழமொழியும் பொருளும் (11-01-2017)

சுட்ட சட்டி சுவை அறியாது

சட்டியில் சமைக்கும்போது பொறுமையாக சூடேற்றி சமையல் செய்யவேண்டும். அப்போதுதான் உணவானது சுவையாக இருக்கும். அதிகமாக சூடேற்றிய சட்டியில் போடும் பொருட்கள் ஒரே கணத்தில் தீய்ந்துவிடும்.

அதுபோல மிக அதிகமாக தீயகுணங்களை கொண்டவர்கள் நாம் நல்லது சொன்னாலும் நல்லது செய்தாலும் கிரகித்துக்கொள்ளமாட்டார்கள் தீயதைதான் செய்வார்கள் என்பதுதான் இப் பழமொழியின் கருத்தாகும்.

சுட்ட சட்டி சுவை அறியாது.

 
Share
0 Shares