பழமொழியும் பொருளும் (10-01-2017)

எறும்பு ஊர கல்லும் தேயும்

கல் வலிமையானது. எறும்போ நுண்ணியது. கற்களின் வலிமைக்கு முன் எறும்பின் பலம் சொற்பமானதுதான். ஆனால் எறும்பு ஊர்ந்து ஊர்ந்து, தொடர்ந்து பயணிப்பதால் வலிமையான கல்லிலும் தேய்ந்து வழி உண்டாகும்.

அதுபோலவே தொடர்ந்து முயற்சித்தால் மிகக் கடினமானதாக இருக் கும் இலக்கும் எளிமையாக கைகூடி வரும்.முயற்சி உடையவர்கள் முயற்சியை கைவிடாது தம் நோக்கத்தில் உறுதியாய் இருந்தால் வெற்றி இலக்கை நிச்சயம் அடைவார்கள் என்ற பொருளை உணர்த்து கிறது இந்த பழமொழி. 

எறும்பு ஊர கல்லும் தேயும்

 
Share
2 Shares